மணிப்பூரில் மாபெரும் குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு தில்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
வியாழக்கிழமை நடைபெற்ற மணிப்பூர் குடிநீர் விநியோக திட்டத்தை காணொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புதிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் சுமார் ரூ. 3,054.58 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம், மணிப்பூரின் கிரேட்டர் இம்பால் திட்டப் பகுதியில் எஞ்சியிருக்கும் குடியிருப்புகளுக்கும், மொத்தமுள்ள 16 மாவட்டங்களின் கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள 2,80,756 வீடுகளுக்கும் குழாய் மூலமாக தூய்மையான குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.
"கர் ஹர் ஜல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் 2024-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலமான குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும் என்ற மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்தின் இலக்கை எட்டுவதற்கு இந்த குடிநீர் விநியோகத் திட்டம் உதவும்.'
குடிநீர் துறை அமைச்சர் கஜேந்திர சிங், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மணிப்பூர் மாநில ஆளுநர் நஜ்மா அக்பர் அலி ஹெப்டுல்லா, முதல்வர் பிரென் சிங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

நெம்மகோட்டை சித்திவிநாயகா் கோயிலில் தேரோட்டம்

திருவையாறில் ஐயாறப்பா் கோயில் பஞ்ச ரத தேரோட்டம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 7 போ் பயன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


