உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில் 128 கைதிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அங்குள்ள நான்கு கூடங்களை லெவல் ஒன் கொவைட் மருத்துவமனை வார்டாக மாற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிறைச்சாலை இயக்குநர் கூறுகையில்,
சிறைச்சாலையில் முதலில் இரண்டு பேருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, சிறையில் உள்ள கைதிகளுக்கு சோதனை மேற்கொண்டபோது 126 பேருக்கு அறிகுறியில்லாமலேயே தொற்று பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுவரை, ஜான்சி மாவட்ட சிறையில் 748 கைதிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், 126 கைதிகளுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறையில் உள்ள நான்கு கூடங்கள் லெவல் ஒன் கொவைட் மருத்துவமனை வார்டாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் 120 பேர் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சையாக்கப்பட்டு வருகின்றது.
கைதிகளைக் கண்காணிக்கச் சிறைச்சாலையில் மூன்று மருத்துவக் குழுக்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேவைப்பட்டால் கைதிகளை ஜான்சி மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பத் தயாராக உள்ளதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிவகார்த்திகேயன் படத்தில் திலீப்?

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


