பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மகாராஷ்டிரத்தில் கரோனா நோயாளியிடம் கட்டணக் கொள்ளை: மருத்துவமனை உரிமம் ரத்து

மகாராஷ்டிர மாநிலம் தாணே நகரில் கரோனா நோயாளியிடம் மோசடியாக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு, கரோனா சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியும் நீக்கப்பட்டுவிட்டது.

News image

மகாராஷ்டிரத்தில் கரோனா நோயாளியிடம் கட்டணக் கொள்ளை: மருத்துவமனை உரிமம் ரத்து

Updated On :25 ஜூலை 2020, 10:28 am

PTI

தாணே: மகாராஷ்டிர மாநிலம் தாணே நகரில் கரோனா நோயாளியிடம் மோசடியாக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு, கரோனா சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியும் நீக்கப்பட்டுவிட்டது.

கரோனா நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனை வசூலிக்கும் கட்டணங்களை தணிக்கை செய்து வரும் தாணே மாகராட்சி, இதுவரை நோயாளிகளிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.27 லட்சத்தை 15 தனியார் மருத்துவமனைகள், நோயாளிகளிடம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தணிக்கையின் போது, கட்டண மோசடியில் ஈடுபட்ட கோத்பன்டர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் உரிமத்தை ஒரு மாதத்துக்கு ரத்து செய்து, கரோனா சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட அனுமதியையும் நீக்கியுள்ளது.

தாணே மாநகராட்சி அமைத்த தணிக்கைக் குழுவினர் இதுவரை நடத்திய தணிக்கையில் சுமார் 56 கட்டண ரசீதுகளில் 6 லட்சம் அளவுக்கு கட்டணக் கொள்ளை நடந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

அதே சமயம, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை நேரடியாகக் கண்காணிக்கவும் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.