2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வந்தே பாரத்: ஆகஸ்ட் 1 முதல் 5-ம் கட்ட சேவை தொடக்கம்

​மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியின் 5-ம் கட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

News image
​மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியின் 5-ம் கட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
Updated On :26 ஜூலை 2020, 4:28 pm

DIN


மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான 5-ம் கட்ட சேவை ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுபற்றி ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 2.5 லட்சம் பேர் ஏற்கெனவே இந்தியா அழைத்து வரப்பட்டனர். ஆகஸ்ட் 1, 2020 முதல் இதன் 5-ம் கட்ட சேவை தொடங்கப்படவுள்ளது. கூடுதல் விமானங்களை விரைவில் அறிவிப்போம்."

5-ம் கட்டத்தில் அமெரிக்கா, கனடா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, தாய்லாந்து, சிங்கப்பூர், பிரிட்டன், சவுதி அரேபியா, நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ் உள்பட பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதனிடையே, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவிக்கையில், "ஏற்கெனவே செய்ததுபோல், 5-ம் கட்டத்தில் கூடுதல் இடங்களும், விமானங்களும் இணைக்கப்படவுள்ளன." என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.