எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மேலும் 47 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு; பட்டியலில் பப்ஜி?

ஏற்கெனவே 59 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 47 செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

News image
பப்ஜி ஆன்லைன் விளையாட்டு
Updated On :27 ஜூலை 2020, 9:45 am

DIN

ஏற்கெனவே 59 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 47 செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கொள்கை விதிகளை மீறியதாக 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து கடந்த மாதம் அறிவித்தது. இதில், டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், கேம் ஸ்கேனர், வீ சாட் உள்ளிட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய செயலிகளும் அடங்கும். 

இதையடுத்து, ஏற்கெனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 47 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் பிரபல ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, அலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தடை செய்யப்படவுள்ள செயலிகளின் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

இந்த 47 சீன செயலிகளும் முன்னதாக தடைசெய்யப்பட்ட செயலிகளின் குளோன்களாக இயங்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர மேலும் 250க்கும் மேற்பட்ட சீன செயலிகள் குறித்த பயனர்களின் தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு மீறல் ஆகியவை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.