எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராஜஸ்தானில் காங்கிரஸுடன் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்கள்: பாஜக மனு தள்ளுபடி

​அனைத்து 6 பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்களும் காங்கிரஸுடன் இணைந்ததை எதிர்த்து அளிக்கப்பட்ட புகார் மீது பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காதது பற்றி பாஜக எம்எல்ஏ-வால் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.

News image
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் (கோப்புப்படம்)
Updated On :27 ஜூலை 2020, 10:48 am

DIN


அனைத்து பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்களும் காங்கிரஸுடன் இணைந்ததை எதிர்த்து அளிக்கப்பட்ட புகார் மீது பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காதது பற்றி பாஜக எம்எல்ஏ-வால் தொடரப்பட்ட வழக்கை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராஜஸ்தானில் உள்ள 6 பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்களும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்ததை எதிர்த்து, பாஜக எம்எல்ஏ மதன் கடந்த மார்ச் மாதம் பேரவைத் தலைவரிடம் புகார் அளித்தார். அதில், 6 பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தனது புகாரின்மீது பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காததை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார் மதன். இந்த மனு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஜக எம்எல்ஏ அளித்த புகார் மீது பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுத்ததையறிந்த உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏ ராமநாராயணன் மீனா இன்று தெரிவிக்கையில், "பேரவைத் தலைவர் அங்கீகாரம் வழங்கியுள்ளதால், அனைத்து பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்களும் தற்போது கெலாட் அரசின் அங்கமாகியுள்ளனர்." என்றார்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, கெலாட் அரசுக்கு இது வலு சேர்த்துள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.