தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ மீட்பு - வீடியோ இணைப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் சிற்றாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எம்எல்ஏவை அவரது ஆதரவாளர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். 

News image

காங்கிரஸ் எம்எல்ஏ

Updated On :31 ஜூலை 2020, 4:37 pm

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் சிற்றாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எம்எல்ஏவை அவரது ஆதரவாளர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். 

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் உள்ளிட்ட இடங்களிலும் வெள்ள நீர் சூழந்துள்ளது. அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பியதோடு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிதோராகர் மாவட்டம் தார்சுலா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் தாமி நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்றிருக்கிறார்.  அப்போது அவர் சிற்றாறு ஒன்றை கயிறு மூலம் கடக்க முயன்றபோது திடீரென வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.

சிறிது தூரம் சென்ற அவரை அவருடன் சென்ற ஆதரவாளர்கள் உடனடியாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.