தில்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் 10 ஊழியர்களுக்கு கரோனா
தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் அலுவலகத்தில் 10 ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.


தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் அலுவலகத்தில் 10 ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புது தில்லியின் சிவில் லைன்ஸ், ராஜ் நிவாஸ் மார்க்கில் அமைந்துள்ள தில்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பதையடுத்து, அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். முடிவுகள் வரும் வரை வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், துணை நிலை ஆளுநர் அலுவலகத்தின் கிளையில் முதலில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 10 ஊழியர்களுக்கு கரோனா தொற்று சாதகமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, மேலும் 210 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 8,171 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,98,706-ஐ எட்டியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...