விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கடந்த 24 மணி நேரத்தில் 1.37 லட்சம் கரோனா பரிசோதனை: ஐ.சி.எம்.ஆர்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,37,158 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2020, 6:07 am

ANI

புது தில்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,37,158 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

மேலும், கரோனா பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை 41,03,233 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

இதுவரை, நாடு முழுவதும் உள்ள மொத்தம் 681 ஆய்வகங்களில், 476 அரசு ஆய்வகங்கள் மற்றும் 205 தனியார் ஆய்வகங்கள் உள்படத் தொற்றுநோய்க்கான பரிசோதனையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதன்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 8,909 புதிய நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,07,615 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 5,815 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே சமயம், 1,01,497 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், 1,00,303 பேர் நோயிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.