இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோரில் 50% பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர்
இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 10% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற நிலையில், கரோனாவுக்கு பலியானோரில் 50% பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்பது தெரிய வந்துள்ளது.


புது தில்லி: இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 10% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற நிலையில், கரோனாவுக்கு பலியானோரில் 50% பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்பது தெரிய வந்துள்ளது.
இதில்லாமல், கரோனாவுக்கு பலியானோரில் 73% பேர் ஏற்கனவே பல்வேறு உடல் நலப் பிரச்னைகளோடு இருந்தவர்கள் என்றும், பிற இதர நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் கரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கை பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதாவது இந்திய மக்கள் தொகையில் 60 - 74 வயதுடையவர்கள் 8% பேர். இதில் கரோனா பாதித்து மரணம் அடைந்தவர்களின் விகிதம் 38%. இந்திய மக்கள் தொகையில் 74 வயதுக்கு மேற்பட்டவர்களின் விகிதம் 2%. இதில் கரோனாவுக்கு பலியானவர்களின் விகிதம் 12%.
இந்தியாவில் கரோனா பாதித்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5,500 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...