கரோனா: தாராவியில் புதிதாக 19 பேருக்கு தொற்று
தாராவியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 19 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தாராவியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 19 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,560 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 122 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 74,860 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 2,587 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 32,329 பேர் குணமடைந்துள்ளனர்.
மும்பை:
மும்பையில் இன்று புதிதாக 1,276 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 49 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 43,262 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 1,417 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 259 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 17,472 ஆக உயர்ந்துள்ளது. 24,373 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,849 ஆக உயர்ந்துள்ளது. சுமார் கடந்த ஒரு வாரமாக தாராவியில் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை 50-க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...