எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மகாராஷ்டிரத்தில் நிசர்கா புயல் கரையை கடக்கத் தொடங்கியது: வானிலை ஆய்வு மையம்

அரபிக்கடலில் உருவான ‘நிசா்கா’ புயல், வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே கரையை கடக்கத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2020, 6:05 am

DIN

அரபிக்கடலில் உருவான ‘நிசா்கா’ புயல், வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே கரையை கடக்கத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நிசர்கா புயல் இன்று பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னதாக முற்பகலிலேயே கரையைக் கடக்கத்தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அலிபாக் அருகே நிசர்கா புயல் கரையைக் கடந்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, இவ்விரு மாநிலங்களிலும் முன்னேற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதுதொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொகபத்ரா கூறுகையில், ‘அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இப்புயலுக்கு ‘நிசா்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயா், வங்கதேசத்தால் பரிந்துரைக்கப்பட்டதாகும். நிசா்கா புயல் மேலும் தீவிரமடைந்து, வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே புதன்கிழமை கரையைக் கடக்கும்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புயல் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில மணி நேரமாக கன மழை பெய்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.