எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரையைக் கடந்தது நிசர்கா புயல்: மகாராஷ்டிரத்தில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன

அரபிக்கடலில் உருவான ‘நிசா்கா’ புயல், வடக்கு மகாராஷ்டிரத்தின் அலிபாக் பகுதிக்கு அருகே இன்று கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் வீசியக் காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

News image
Updated On :3 ஜூன் 2020, 12:01 pm

PTI


மும்பை: அரபிக்கடலில் உருவான ‘நிசா்கா’ புயல், வடக்கு மகாராஷ்டிரத்தின் அலிபாக் பகுதிக்கு அருகே இன்று கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் வீசியக் காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

ராய்காட் மாவட்டத்தில் இருந்து 87 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீவர்தன் பகுதியில் நிசர்கா புயல் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது வீசிய காற்றால் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததாக மாவட்ட ஆட்சியர் நிதி சௌத்ரி தெரிவித்துள்ளார்.

நிசர்கா புயலின் கண் போன்ற பகுதி மட்டும் சுமார் 60 கி.மீ. விட்டம் கொண்டதாக இருந்தது. இது ராய்காட் மாவட்டத்தைக் கடந்து உரன் பகுதியை நோக்கிப் பயணிக்கிறது.

புயல் கரையைக் கடப்பதையொட்டி, ஏற்கனவே ராய்காட், மும்பை, தாணே, நாசிக், துலே உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Story image

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 13 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் அனைவரும் வியாழக்கிழமை காலை வரை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

நிசர்கா புயல் இன்று பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னதாக முற்பகலிலேயே கரையைக் கடக்கத்தொடங்கியது.

மகாராஷ்டிர மாநிலம் அலிபாக் அருகே நிசர்கா புயல் கரையைக் கடக்க ஆரம்பித்தது. புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 115 கி.மீ. வேகத்தில் வீசியது. 

இதையொட்டி, இவ்விரு மாநிலங்களிலும் முன்னேற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த புயல் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் காலை முதலே கன மழை பெய்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.