திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கடந்த 24 மணி நேரத்தில் 3,804 பேர் குணமடைந்துள்ளனர்: மத்திய அரசு

கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 3,804 பேர் குணமடைந்துள்ளனர்.

News image
Updated On :4 ஜூன் 2020, 1:25 pm

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 3,804 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுபற்றி மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,804 கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,04,107 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 47.99 சதவீதம். தற்போது மொத்தம் 1,06,737 பேர் சிகிச்சையில் உள்ளனர். அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். 

கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் அரசு ஆய்வகங்கள் எண்ணிக்கை 498 ஆகவும், தனியார் ஆய்வகங்கள் எண்ணிக்கை 212 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,39,485 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 42,42,718 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.