ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மாநிலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு

கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவது விட்டது.

News image

கேரள உயர் நீதிமன்றம்

Updated On :5 ஜூன் 2020, 11:28 am

கொச்சி: கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவது விட்டது.

கரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கேரளாவில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்  மாநில அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க ஸ்மார்ட் போன் இல்லாத நிலையில் மாணவி ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் கடந்த வாரத்தில் நடந்தது.

இந்நிலையில் கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, கிரிஜா என்பவர் மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், மாநிலத்தின் உள்ளடங்கிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் குறிப்பாக எஸ்.சி / எஸ்.டி சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு இந்த ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெறுவதற்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படாத நிலையில், இதில் பெரிய பாகுபாடு நிலவுகிறது. எனவே கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிப்பது குறித்து, மாநில அரசு மற்றும் கேரள கல்விசார்  உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவிற்கு ஆலோசனை வழங்குமாறு கோரியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி டயஸ் முன்னிலையில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகள் துவங்குவதற்கு முன்பே மாணவர்களுக்கு அதுதொடர்பான உரிய வசதிகள் செய்து கொடுகபட்டுள்ளது என்றும், ஆன்லைன் வகுப்பிற்கான பாடங்கள் மாணவர்களால் மொத்தமாக எளிதான முறையில் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து தற்போதைய சூழலில் மனுதாரரின் கோரிக்கைப்படி, கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிமதி மறுப்புத் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.