ஒடிசா மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கோர்த் மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயது முதியவர் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். இவர் ஏற்கெனவே நீரிழிவு மற்றும் பிற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
ஒடிசாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி மேலும் 130 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,608 ஆக உயர்ந்துள்ளது. மொத்த வழக்குகளில் தனிமைப்படுத்தலிலிருந்து 124 பேரில் ஆறு பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த மாநிலத்தில் 1,481 பேர் இதுவரை நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், 1,117 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவேடுகளை ஆய்வுசெய்த ஆட்சியா்

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்: தி.வேல்முருகன்

வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: தவெக கோரிக்கை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


