ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஜூலை 21 முதல் இந்தாண்டு அமர்நாத் யாத்திரை தொடக்கம்

தெற்கு காஷ்மீரின், இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தைத் தரிசிக்க நடைபெறும் புனித யாத்திரிரை இந்தாண்டு ஜூலை 21-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 

News image
Updated On :6 ஜூன் 2020, 7:19 am

தெற்கு காஷ்மீரின், இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கான புனித யாத்திரை இந்தாண்டு ஜூலை 21-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 

பிரசித்தி பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரை செல்கின்றனர். 

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அமார்நாத் யாத்திரை தாமதமாகியுள்ளதோடு, யாத்திரைக்கான கால அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 21-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

சாதுக்களைத் தவிர, 55 வயதுக்குக் குறைவான அனைத்து யாத்ரீகளும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அமர்நாத் கோயிலுக்கு வரும் யாத்ரீகள் அனைவருக்கும் எல்லையிலேயே கரோனா பரிசோதனை செய்யப்படுவார்கள். வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே குகைக் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 

இந்தாண்டு யாத்திரை வடக்கு காஷ்மீர் பால்டால் பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பஹல்காம் பாதை வழியாக யாத்திரை செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரக்‌ஷா பந்தன் பண்டிகையுடன் இணைந்த ஷ்ரவன் பூர்ணிமாவில் (ஆகஸ்ட் 03) இந்தாண்டு யாத்திரை நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.