சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கரோனா படுத்தும் பாடு! உயிரிழந்த தந்தையைக் காண மகளுக்கு 3 நிமிடங்கள் மட்டுமே கிடைத்த சோகம்!

மணிப்பூரைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது உயிரிழந்த தந்தையைக் காண அவருக்கு 3 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. 

News image
Updated On :7 ஜூன் 2020, 10:04 am

DIN

மணிப்பூரைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது உயிரிழந்த தந்தையைக் காண அவருக்கு 3 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. 

கரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை விட புலம் பெயர் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் பிரச்னைகள், அவர்கள் சந்திக்கும் இழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

அந்தவகையில், மணிப்பூரைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உயிரிழந்த தந்தையைக் காண அவருக்கு 3 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

சென்னையில் பணிபுரிந்து வரும் 22 வயதான அஞ்சலி, தனது சொந்த ஊரான மணிப்பூருக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

இந்நிலையில், நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தந்தை அண்மையில் உயிரிழந்தார். அஞ்சலிக்கு கரோனா தொற்று இருந்ததால் அவர் தனது தந்தைக்கு விடைகொடுக்க தனியே 3 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. தந்தையின் சவப்பெட்டிக்கு சற்று இடைவெளி விட்டு மண்டியிட்டு அவர் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதில் அஞ்சலி, பிபிஇ எனும் பாதுகாப்பு உடையை அணிந்திருந்தார். அவர் தந்தையின் உடலுக்கு முன் அழுதபோது அவரது தாய் அல்லது உறவினர் யாரும் அருகில் வந்து ஆறுதல் கூறக் கூட முடியாத சூழ்நிலை அங்கு இருந்தது. சரியாக 3 நிமிடம் முடிந்தவுடன் சுகாதாரப் பணியாளர்கள் அஞ்சலியை அழைத்துச் சென்று விட்டனர். 

மே 25 அன்று, இந்தியா முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் ஒரு ஷ்ராமிக் ரயிலில் அந்தப் பெண் சென்னையில் இருந்து திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. 

'இதுபோன்ற சூழ்நிலையில் சொந்த பெற்றோரை கட்டிப்பிடித்து கூட அழ முடியாத அந்த வலியை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இந்த வைரஸ் மனிதர்களை பல வழிகளில் உதவியற்றவர்களாக ஆக்கியுள்ளது' என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். 

கரோனா வைரஸ் தொற்று உடல்ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, இதுபோன்று பல்வேறு மனிதர்களிடையே மனரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.