குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு கரோனா பரிசோதனை

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

News image
Updated On :9 ஜூன் 2020, 6:48 am

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு கடந்த ஜூன் 7 ஆம் தேதி லேசான காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து, அவருக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது நாளை காலை பரிசோதனை முடிவுகள் வர வாய்ப்புள்ளது. 

கடைசியாக அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகளுடன் தனது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்துக்குப் பின்னர் அவர் நேரடியாக எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு நீரிழிவு நோயும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.