ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு: முன்னாள் முதல்வர் புகார்

என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் புகார் அளித்துள்ளார்.

News image

திக்விஜய் சிங்

Updated On :10 ஜூன் 2020, 11:41 am

போபால்: என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் புகார் அளித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் பெயரில் அமைந்த ட்விட்டர் கணக்கு ஒன்றில் இருந்து சில கருத்துகள் பதியப்பட்டு இருந்தது. இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.

இந்நிலையில் என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநில சைபர் குற்றங்கள் பிரிவு காவல்துறைக்கு அவர் அளித்துள்ள புகாரில், ‘என்னுடைய பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ஒன்றினை உருவாக்கி , அதன் வழியாக சர்சைக்குரிய கருத்துகள் பதிவு செய்யப்படுவது என் கவனத்திற்கு வந்தது, எனவே அச்செயலில் ஈடுபட்ட நபரைக் கைது செய்வதுடன், அந்தக் கணக்கையும் உடனே முடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவத்துள்ளார்.

அத்துடன் @digvijaya28 என்ற பெயரில் செயல்படும் கணக்கு மட்டுமே தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவரின் புகாரை ஏற்று, குறிப்பிட்ட கணக்கினை நீக்குமாறு சைபர் குற்றங்கள் பிரிவு ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.