நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், தனியார் பரிசோதனை ஆய்வகத்தின் அலட்சியத்தால் 35 பேர் கரோனா தொற்று இருப்பதாகக் கூறப்பட்டு கரோனா வார்டில் தங்கவைக்கப்பட்ட கொடூரம் நடந்தேறியுள்ளது.
இந்த சம்பவத்தில் தனியார் பரிசோதனை ஆய்வகத்துக்கு கௌதம் புத்தா நகர் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாவது, காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னை இருந்த 35 பேர் தனியார் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அவர்களை கரோனா பரிசோதனை செய்யுமாறு மருத்துவக் கூற, அவர்கள் தனியார் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். அனைவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருப்பதாக பரிசோதனை முடிவுகள் வெளியானதை அடுத்து, அனைவரும் அரசு தனிமைப்படுத்தும் மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிக்கலாம்.. சென்னையில் பாதுகாப்பான இடமாக இருக்கும் ஒரே மண்டலம் மணலி
அங்கு, அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, மாதிரிகள் தேசிய தொற்றுதொய் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அவர்களுக்கு கரோனா இல்லை என்பது தெரிய வந்தது.
இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு, அனைவரும் தனிமைப்படுத்தும் மையத்தில் இருந்து தனியாக கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
பரிசோதனை முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டது குறித்து விசாரித்ததில், பரிசோதனைக்காக தனியார் பரிசோதனை ஆய்வகங்களில் மாதிரிகளை சேகரித்து, அதனை உரிய வெப்பநிலையில் ஊழியர்கள் பராமரிக்கத் தவறிவிட்டனர். இதனால், அவர்களாகவே பரிசோதனை முடிவுகளை பதிவு செய்து கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இதுபோல மூன்று ஆய்வகங்கள் அரசு வெளியிடும் விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில், அனுமதி பெறாமலேயே பணத்துக்காக சில ஆய்வகங்கள் செயல்படுவதும், இங்கு ஒருவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள ரூ.4,500 முதல் 5,000 வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


