சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கரோனா தொற்று 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :13 ஜூன் 2020, 3:59 am

DIN

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரம், தமிழ்நாடு, தில்லி ஆகிய 3 மாநிலங்களில்தான் கரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் கரோனா தொற்று சமூக பரவலாகிவிட்டதா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 11,458 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,993-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 386 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 8,884-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,45,779 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,54,330 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1,01,141 பேர் கரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,717 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று கண்டறியப்படுவது இது 2ஆவது முறையாகும். முன்னதாக நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 10,956 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.