போபால்: மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் சீனாவிற்காக வேலை செய்பவர் என்று பாஜக தேசிய துணைத்தலைவர் பிரசாந்த் ஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
காங்கிரசும் அதன் தலைமையும் சீனாவிற்கு ஆதரவாகப் பேசுவதற்கு காரணம் உள்ளது. காங்கிரசின் முந்தைய ஆட்சிகாலத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த கமல்நாத்தான் இதற்கு முக்கிய காரணம். அவர் சீனாவிற்காக வேலை செய்பவர்.
அப்போதைய ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. குறிப்பிட்ட சில பொருட்கள் இந்தியாவிலேயே கிடைத்த போதிலும், சுமார் 250 வகை பொருள்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அவற்றிற்கு எல்லாம் குறைந்த அளவே இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இதன்மூலம் கிடைத்த பணம் எல்லாம், காங்கிரசிற்கும், ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கும் வழங்கபட்டது ஒரு குற்றமாகும். இவை அனைத்திற்கும் வர்த்தகத்துறை அமைச்சரே காரணம். இவை அனைத்திற்குமே ஆதாரம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களில் 98 இந்தியாவில்! நாடு முழுக்க வெப்ப அலை!!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


