மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 150 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 150 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

மகாராஷ்டிரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 150 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

Updated On :28 ஜூன் 2020, 10:36 am

DIN


மகாராஷ்டிரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 150 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள் எண்ணிக்கை பற்றிய சமீபத்திய தகவல்களை மகாராஷ்டிர காவல் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி அங்கு கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 150 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதிப்புக்குள்ளான காவலர்கள் எண்ணிக்கை 4,666 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியான காவலர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.