இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5.66 லட்சமாக உயர்வு
இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,66,840-ஆக உயர்ந்துள்ளது.


இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,66,840-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே, வைரஸ் தொற்று அதிகம் இருக்கும் இடங்களில் முழு ஊடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,48,318-லிருந்து 5,66,840-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பலியானோரின் எண்ணிக்கை 16,475-லிருந்து 16,890-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723-லிருந்து 3,34,822-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இந்தியாவில் கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 415 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...