ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வடகிழக்கு தில்லியில் தேர்வு எழுத வந்த மாணவர்களை பூக்கள் கொடுத்து வரவேற்ற காவல்துறையினர்!

வடகிழக்கு தில்லியில் திங்களன்று சிபிஎஸ்இ தேர்வு எழுத வந்த மாணவர்களை காவல்துறையினர் பூக்கள்  கொடுத்து வரவேற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image

மாணவர்களை வரவேற்ற காவல்துறையினர்!

Updated On :2 மார்ச் 2020, 10:53 am

புது தில்லி: வடகிழக்கு தில்லியில் திங்களன்று சிபிஎஸ்இ தேர்வு எழுத வந்த மாணவர்களை காவல்துறையினர் பூக்கள் கொடுத்து வரவேற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புது தில்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

தில்லி காவல்துறையினர் அளித்துள்ள தகவல்களின்படி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை அங்கு 245 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 41 ஆயுதச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர் வன்முறைச் சம்பவங்களின் காரணமாக அங்குள்ள மையங்களில் நடக்கவிருந்த சிபிஎஸ்இ  10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.   

இந்நிலையில் வடகிழக்கு தில்லியில் திங்களன்று சிபிஎஸ்இ தேர்வு எழுத வந்த மாணவர்களை காவல்துறையினர் பூக்கள் கொடுத்து வரவேற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியில் அமைந்துள்ள சர்வோதயா பால வித்யாலயா பள்ளியில்தான், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை திங்களன்று எழுத வந்த மாணவர்களுக்கு காவல்துறையினர் பூக்கள் கொடுத்து வரவேற்ற நெகிகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.