/

தில்லி வன்முறையைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இடதுசாரி எம்.பி.க்கள் போராட்டம்

வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து இடதுசாரிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

News image
Updated On :4 மார்ச் 2020, 7:11 am

PTI


புது தில்லி: வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து இடதுசாரிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை முன்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன்  உட்பட இடதுசாரிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தில்லி வன்முறைச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லி வன்முறைச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து நாள்தோறும் நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று இடதுசாரி எம்.பி.க்கள் அமைதியான முறையில் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.