டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரோனாவால் இந்தியாவில் முதல் மரணம்

இந்தியாவில் கரோனாவால் முதியவர் ஒருவர் உயிரிழந்தது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :12 மார்ச் 2020, 7:04 pm

DIN

இந்தியாவில் கரோனாவால் முதியவர் ஒருவர் உயிரிழந்தது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் மொஹம்மது ஹூசைன் சித்திக் சிகிச்சைப் பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த மொஹம்மது ஹூசைன், ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவரது சளி மாதிரி பெங்களூருவில் உள்ள மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் கரோனாவால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தெலங்கானா அரசும் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு முதல் பலியாக இது கருதப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், கரோனாவால் முதியவர் கர்நாடகத்தில் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அவர் சௌதி அரேபியாவுக்குச் சென்று வந்த, கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.