ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனா: ஒடிஸாவிலும் பள்ளி, கல்லூரி, திரையரங்கு மூடல்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒடிஸா மாநிலத்திலும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி மையங்களையும், திரையரங்கு, நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடங்களையும் மூட அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

naveen-patnaik052409

Updated On :13 மார்ச் 2020, 7:06 am


புவனேஸ்வர்: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒடிஸா மாநிலத்திலும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி மையங்களையும், திரையரங்கு, நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடங்களையும் மூட அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒடிஸா சட்டப்பேரவையில் இன்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இது தொடர்பான உத்தரவை வெளியிட்டார்.

ஒடிஸா மாநிலத்தில் தேர்வு நடைபெறும் கல்வி மையங்களைத் தவிர்த்து, அனைத்து கல்விமையங்களும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், கரோனா பரவும் அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்களையும் மார்ச் 31ம் தேதி வரை மூடி வைக்க நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.