

மகாராஷ்டிராவில் புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோயில் இன்று மாலை 3 மணியுடன் மூடப்படுவதாக சாய்பாபா கோயில் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்த் தொற்று மேலும் பரவால் இருக்க மத்திய மாநில அரசுகள் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் கூட்டம் சேருவதைத் தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பிரசித்தி பெற்ற கோயில்களான திருப்பதி ஏழுமலையான் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சைப் பெரிய கோயில் உள்பட தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் கடும் சோதனை செய்யப்பட்ட பிறகே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் கோயில்களுக்கு வருவதை தவிர்க்குமாறும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று மேலும் பரவால் தடுக்க மத்திய சுகாதார அமைச்சகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. மகாராஷ்டிர மாநிலத்தில் 39 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மகாராஷ்டிராவில் உள்ள புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோயில் மகா ஆரத்தியுடன் இன்று மாலை 3 மணி முதல் மூடப்படும் என்று சீரடி சாயி ட்ரஸ்ட் அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்கனவே பிரபலமான சித்திவிநாயக், மும்பாதேவி உட்பட பல முக்கிய கோயில்கள் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.