மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட சிறையில் ஒத்திகை

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட திகார் சிறையில் ஒத்திகை தொடங்கியது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 9:43 pm IST

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட திகார் சிறையில் ஒத்திகை தொடங்கியது. 

கடந்த 2012ம் ஆண்டு தில்லியைச் சேர்ந்த நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  சாலையில் தூக்கி எறியப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து, அவரது சார்பில் அனுப்பப்பட்ட கருணை மனுவும் புதன்கிழமை குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, நான்கு குற்றவாளிகளின் கருணை மனுவும் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நிா்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்குமாறு தில்லி நீதிமன்றத்துக்கு திகாா் சிறை நிா்வாகம் கோரிக்கை விடுத்திருந்தது. 

அதன்படி, நிர்பயா குற்றவாளிகள் முகேஷ் குமாா் சிங், பவன் குப்தா, வினய் சா்மா, அக்ஷய் சிங் ஆகிய நால்வருக்கும் வருகிற மார்ச் 20ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றும்படி திகார் சிறை நிர்வாகத்துக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட திகார் சிறையில் இன்று காலை ஒத்திகை தொடங்கியது. இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் டம்மி பொம்மையை வைத்து தூக்கிலிடும் ஒத்திகையை தூக்கிலிடும் பணியாளர் பவன் நடத்தினார்.

முன்னதாக, நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் இதுவரை மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது நான்காவது முறையாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.