பெங்களூரு: கர்நாடகத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதால், கர்ப்பிணி உட்பட மூன்று பேருக்கு மறுபரிசோதனை நடத்தப்படுகிறது.
முன்னதாக, கர்ப்பிணி ஒருவருக்கு கரோனா இருப்பதாக தனியார் மருத்துவமனை ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு விக்டோரியா மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா இல்லை என்று முடிவு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அவர் கரோனா பிரிவில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு, தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, பேகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் ஜெயாநகர் பொது மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அப்போது இருவரின் விவரங்களையும் கேட்ட மருத்துவப் பணியாளர்கள், தவறுதலாக இரண்டு மாதிரிகளிலும், ஒரே நபரின் பெயர் மற்றும் விவரங்களை பதிவிட்டுவிட்டனர்.
அதில் ஒருவருக்கு கரோனா இருப்பதாகவும், மற்றொருவருக்கு கரோனா இல்லை என்றும் முடிவு வெளியாகியுள்ளது. ஆனால், இரண்டிலுமே ஒரே பெயர் இருப்பதால், இவருக்கும் மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
7 பேரும் துரோகிகள்! விவசாயிகள் மரணத்திற்குக் காரணமான கட்சியில் இணைந்துள்ளனர்!

வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


