தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உத்தரகண்டில் இன்று புதிதாக யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை

உத்தரகண்டில் இன்று புதிதாக யாருக்கும் கரோனா நோய்த் தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :7 மே 2020, 11:30 am

DIN

உத்தரகண்டில் இன்று புதிதாக யாருக்கும் கரோனா நோய்த் தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் வகையில் ஊரடங்கு 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,952ஆக உயர்ந்துள்ளது. தற்போது தொடர் சிகிச்சையில் இருப்பவர்கள் 35,902 பேர்.

அதேசமயம் 15,267 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,783 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 3 நாளில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உத்தரகண்டில் இன்று புதிதாக யாருக்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 61 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் 21 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 143 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அம்மாநில சுகதாதாரத்துறை கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.