தில்லியில் 15 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி
தில்லியில் 2 மருத்துவமனைகளில் 15 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தில்லியில் 2 மருத்துவமனைகளில் 15 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 3,390 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,342 ஆகவும், உயிரிழப்பு 1,886 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தில்லியில் 2 மருத்துவமனைகளில் 15 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் தில்லியில் தற்போதுவரை 5,980 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,931 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...