டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஊருக்கு நடந்து செல்லும் வழியில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி; குழந்தையோடு 150 கி.மீ. நடந்தார்

மகாராஷ்டிரத்தில் இருந்து மத்தியப் பிரதேசம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளியான கர்ப்பிணிப் பெண் செல்லும் வழியிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

News image
Updated On :14 மே 2020, 10:25 am

DIN


மகாராஷ்டிரத்தில் இருந்து மத்தியப் பிரதேசம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளியான கர்ப்பிணிப் பெண் செல்லும் வழியிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

சாலையிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த அப்பெண், வெறும் 2 மணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு பெற்றெடுத்தக் கைக்குழந்தையோடு மேலும் 150 கி.மீ. நடந்து சென்றுள்ளார்.

கர்ப்பிணி தனது கணவருடன் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்னா கிராமத்துக்கு நடந்தே வந்துள்ளனர். வழியில் கடந்த செவ்வாயன்று கர்ப்பிணிக்கு கடும் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சாலையோரத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த அவர், 2 மணி நேரம் ஓய்வு எடுத்து விட்டு, குழந்தையைத் தூக்கிக் கொண்டு சொந்த கிராமத்தை அடைய மேலும் 150 கி.மீ. நடந்துச் சென்றுள்ளார்.

இந்த தகவல் கிடைத்த சட்னா மாவட்ட நிர்வாகம், உடனடியாக தாயையும் குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு தற்போது இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் நடைப்பயணமாகவே சொந்த ஊர் சென்றுள்ளனர். ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து சென்ற புலம் பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரயில்களை இயக்கினாலும், அது கையில் காசில்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பலனளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.