ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரயில்கள் மூலம் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர் : ரயில்வே

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இந்திய ரயில்வே இயக்கிய ரயில்கள் மூலம் இதுவரை சுமார் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :14 மே 2020, 9:42 am

DIN


புது தில்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இந்திய ரயில்வே இயக்கிய ரயில்கள் மூலம் இதுவரை சுமார் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றிய புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தங்கள் மாநில தொழிலாளர்களை சொந்த ஊர் கொண்டு வர உதவுமாறு பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன.

இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மே 1-ம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மே 1-ம் தேதி முதல் இதுவரை இயக்கப்பட்ட 800 ரயில்கள் மூலம் சுமார் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியிருப்பதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.