
புது தில்லி: இந்திய வான்பரப்பை விமானங்கள் பயன்படுத்துவதில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பதாவது, இந்திய வான்பரப்பை விமானங்கள் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
வான் எல்லையை தாராளமாகப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் விமான சேவை நிறுவனங்களுக்கு எரிபொருளும், பயண நேரமும் குறையும்.
இந்தியாவில் கூடுதலக 12 விமான நிலையங்களின் பராமரிப்பு ஒப்பந்தத்துக்கு தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
விரைவில் விமான பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு மையமாக இந்தியா உருவாகும்.
இந்தியாவில் விமான பழுது மற்றும் பராமரிப்புத் துறையில் ரூ.2000 கோடி பணம் புழங்கும்.
மேலும் 6 விமான நிலையங்களில் தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்படும்.
விமான நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகள் அரசு, தனியார் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.