தில்லியில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.


புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
நாட்டில் தற்போதைய கரோனா பாதிப்பு நிலை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்ப எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நாட்டில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,01,139-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் 3163-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39174- ஆக உள்ளது.
மேலும், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4970 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 134 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில்தான் நாளை காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...