விஜயவாடா : பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளோடு, ஆந்திர மாநிலத்தில் வியாழக்கிழமை முதல் பேருந்து சேவையை ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தொடங்க உள்ளது.
ஆந்திர மாநிலத்துக்குள் 436 வழித்தடங்களில் 1683 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாளை காலை 7 மணி முதல் ஆந்திரத்தில் பேருந்து சேவைகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைன் மூலம் பயணிகள் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழக துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரதாப் கூறுகையில், பேருந்தில் ஏறும் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம். பேருந்துக்குள் ஏறும்போது பயணிகள் தங்கள் கையை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வசதி ஏற்படுத்தப்படும்.
அதே சமயம், பேருந்தில் பயணிக்கும் பயணிகள் தங்களது செல்லிடப்பேசியில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வதும் கட்டாயமாக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம் விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் நகர பேருந்து சேவைகள் இயக்கப்படாது என்றும் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


