மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மகாராஷ்டிரத்தில் 40 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,345 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :21 மே 2020, 3:46 pm

DIN


மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,345 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு இன்று புதிதாக 2,345 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 41,642 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று  64 பேர் பலியாகியுள்ளனர். இதில் மும்பையில் மட்டும் 41 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 1,454 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு நாளைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்படுவது இன்றுடன் தொடர்ச்சியாக 5-வது நாளாகும்.

மொத்தம் பாதிப்பு: 41,462

மொத்தம் பலி: 1,454 

மொத்தம் குணமடைந்தோர்: 11,726

சிகிச்சையில் உள்ளவர்கள்: 28,454

மொத்தம் பரிசோதிக்கப்பட்டவர்கள்: 3,19,710

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.