ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கோட்சேவைப் புகழ்ந்து ட்வீட்: நடிகர் சிரஞ்சீவி சகோதரர் மீது புகார்

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்து ட்வீட் செய்ததற்காக, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாகபாபு மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News image

நடிகர் நாகபாபு

Updated On :21 மே 2020, 12:12 pm

ஹைதராபாத்: மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்து ட்வீட் செய்ததற்காக, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாகபாபு மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரான மனவாதா ராய் ஒஸ்மானியா பல்கலைக்கழக காவல் நிலையத்தில் இந்தப் புகாரை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்து, நடிகர் நாகபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக அநேக மக்களின் மனம் புண்பட்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஒஸ்மானியா பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தெலங்கானா மாநில டிஜிபி மற்றும் ஹைதராபாத் காவல்துறை ஆணையரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

அதேசமயம் அவர் புகார் சட்டஆலோசனைக்காக அனுப்பட்டுள்ளது என்று ஒஸ்மானியா பல்கலைக்கழக காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர ரெட்டி தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.