நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கரோனா தொற்று: பிற மாநிலங்கள் நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பிற மாநிலங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :24 மே 2020, 4:13 pm

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பிற மாநிலங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியப் பிரதேசம்:

மத்தியப் பிரதேசத்தில் இன்று புதிதாக 294 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 6,665 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,408 பேர் குணமடைந்துள்ளனர். 290 பேர் பலியாகியுள்ளனர்.

ஹரியாணா:

ஹரியாணாவில் இன்று புதிதாக 53 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,184 ஆக உயர்ந்துள்ளது.16 பேர் பலியாகியுள்ளனர்.

தெலங்கானா:

தெலங்கானாவில் புதிதாக 41 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,854 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 709 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் புதிதாக 208 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,667 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,203 பேர் சிகிச்சையில் உள்ளனர். 203 பேர் பலியாகியுள்ளனர். 

குஜராத்:

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 14,063 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,412 பேர் குணமடைந்துள்ளனர். 858 பேர் பலியாகியுள்ளனர்.

ஜம்மு & காஷ்மீர்:

ஜம்மு & காஷ்மீரில் இன்று புதிதாக 52 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஜம்முவிலிருந்து 22 பேர், காஷ்மீரிலிருந்து 30 பேர். அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,621 ஆக உள்ளது.

உத்தரகண்ட்:

இரவு 7.30 மணி நிலவரப்படி புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 317 ஆக உயர்ந்துள்ளது.

பஞ்சாப்:

பஞ்சாபில் இன்று புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,060 ஆக உயர்ந்துள்ளது. அந்த மாநிலத்தில் தற்போது 122 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.