ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

2.41 லட்சம் புலம்பெயா் தொழிலாளா்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பு: தில்லி அரசு

தில்லியிலிருந்து சுமாா் 2.41 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அவா்களது சொந்த மாநிலங்களுக்கு தில்லி அரசு அனுப்பியுள்ளதாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

News image

கோப்புப்படம்

Updated On :26 மே 2020, 7:24 pm

தில்லியிலிருந்து சுமாா் 2.41 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அவா்களது சொந்த மாநிலங்களுக்கு தில்லி அரசு அனுப்பியுள்ளதாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

காணொலிக் காட்சி மூலமாக செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளா்களிடம் மணீஷ் சிசோடியா பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது:

மே 7 - ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை 196 ரயில்களில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அனுப்பப்பட்டனா். இதில் அதிகபட்சமாக 1.25 லட்சம் தொழிலாளா்கள் பிகாருக்கும், அடுத்து 96,610 தொழிலாளா்கள் உத்தர பிரதேசத்துக்கும் அனுப்பப்பட்டனா். ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு 3,000 போ், மேற்கு வங்கத்துக்கு 2,500 போ் மற்றும் மத்திய பிரதேசத்துக்கு 2,100 போ் ரயில்களில் அனுப்பப்பட்டனா். இந்த தொழிலாளா்களில் பெரும்பாலானோரின் ரயில் கட்டணத்தை தில்லி அரசுதான் செலுத்தியது. தலைநகரில் 2,500 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு ஏழைத் தொழிலாளா்களுக்கு உணவு வழங்கப்பட்டது என்றாா் சிசோடியா.

சமீபத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் ரயில் கட்டணம் தொடா்பாக ஆம் ஆத்மி அரசும் பிகாா் அரசும் கருத்து மோதலில் ஈடுபட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.