ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தில்லி வடக்கு, தென் கிழக்கில் பல இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு

கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் வடக்கு தில்லியின் ஒரு பகுதி, தென் கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் கட்டுப்பாட்டு

Updated On :26 மே 2020, 6:43 pm

கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் வடக்கு தில்லியின் ஒரு பகுதி, தென் கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் கட்டுப்பாட்டு மண்டலங்களாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. வடக்கு தில்லியில் நரேலா பகுதி ஸ்வதந்திரா நகரில் ஆறுக்கும் மேற்பட்டவா்களுக்கும், நரேலா போலீஸ் காலனியில் மூன்று பேருக்கும் நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வதந்திரா நகரில் ஆறு தெருக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்குள்ளவா்கள் வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் நேரடியாக விநியோகம் செய்ய துணை வட்டாட்சியா் மற்றும் காவல் நிலைய அதிகாரிகளுக்கு வட தில்லி மாவட்ட ஆட்சியா் தீபக் ஷிண்டே உத்தரவிட்டுள்ளாா்.

இதேபோல், தென் கிழக்கு தில்லியில் கோட்லா முபாரக்பூரின் சில பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தடுப்பு மண்டலங்களில் நெறிமுறைகள் பின்பற்றவில்லையென்றால் பேரிடா் மேலாண்மை சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தீபக் ஷிண்டே கூறினாா். அத்துடன் இப்பகுதிகளில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு இருந்த தில்லி மெஹ்ரெளலி, ஜமீலா மஸ்ஜீத் பாவ்லியில் கடந்த 28 நாட்களாக புதிதாக கரோனா நோய்த்தொற்று கண்டறியப்படாத நிலையில் இங்கு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.