கேரளத்தில் கரோனா தொற்றுக்கு 8-வது நபர் பலி

கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 8வது நபர் பலியாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 
கேரளத்தில் கரோனா தொற்றுக்கு 8-வது நபர் பலி
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 8வது நபர் பலியாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், 

கடந்த மே 7-க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வரத் தொடங்கியுள்ளன. இவர்களில், பெரும்பாலானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இது எதிர்பார்த்தது தான். 

நிலைமை கட்டுக்குள் இருப்பதால் மக்கள் தேவையின்றி கவலை கொள்ளத் தேவையில்லை. சுகாதாரத்துறை திறம்படக் கண்காணித்துப் புலம்பெயர்ந்தோர்களைத் தனிமைப்படுத்தி வருகிறது. முதல்கட்டத்தில் வைரஸ் பரவல் 30 சதவீதமாக இருந்தது. தற்போது, மேலும் அதிக தொற்று பரவியுள்ள நிலையில் பரவல் விகிதம் 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சாதகமானதொன்றாகும் என்று அவர் கூறினார். 

மேலும், 68 வயது முதியவர் தனது மனைவி, மகனைப் பார்த்துவிட்டு, கடந்த மே 11-ம் தேதி கேரளத்திற்குத் திரும்பிய நிலையில், அவர் தனிமைப்படுத்தலில் இருந்தார். அவருக்கு உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் காரணமாக மே 18-ம் தேதி உடல்நிலை மோசமடைந்து, பதானம்திட்டாவில் உள்ள பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

கடந்த மே 26 தேதியன்று, அவரது உடல்நிலை மேலும் மோசடைந்து கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக அவர் இன்று காலை உயிரிழந்தார். கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த எட்டாவது நபர் இவராவார் என்று ஷைலாஜா கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com