ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

எங்கே பிரக்யா சிங் தாக்குர்? போபாலில் முளைத்த போஸ்டர்கள்!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் தொகுதி எம்.பியான பிரக்யா சிங் தாக்குர் எங்கே? என்று கேள்வி எழுப்பி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

News image

பிரக்யா சிங் தாக்குர்

Updated On :29 மே 2020, 11:02 am

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் தொகுதி எம்.பியான பிரக்யா சிங் தாக்குர் எங்கே? என்று கேள்வி எழுப்பி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் தொகுதி பாஜக எம்.பியாக இருப்பவர் பிரக்யா சிங் தாக்குர். சர்ச்சையாக ஏதாவது கூறி  வம்புகளில் சிக்கிக் கொளவது அவரது வழக்கம்.

இந்நிலையில் பிரக்யா சிங் தாக்குர் எங்கே? என்று கேள்வி எழுப்பி போபால் நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நகரின் புதிய சந்தைப் பகுதி மற்றும் முதலாவது மற்றும் இரண்டாவது இணைப்பு சாலைகளில் உள்ள  பேருந்து நிறுத்தங்களில் இத்தகைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டர்களில் பிரக்யா சிங் படத்துடன், ‘கரோனா வைரஸ் தொற்றால் போபால் நகரம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. எம்.பி பிரக்யா சிங் தாக்குர் எங்கே?” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள் யாரென்று தெரியவில்லை.

முன்னதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் நாத் எம்.பி, காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோர் குறித்தும் இத்தகைய  போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் அதில் அதனை அச்சடிக்கச் செய்தோரின் பெயர் மற்றும் எண் இடம்பெற்றிருந்ததால், தொடர்புடையோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.