டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜம்மு-காஷ்மீரில் அக். வரை 200 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 200 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர்.

News image
பாதுகாப்புப் படை வீரர்கள்
Updated On :27 ஜனவரி 2024, 5:46 pm

ANI

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 200 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர்.

தேசிய புலனாய்வு அமைப்பு தொகுத்த தரவுகளின்படி, மத்திய ரிசர்வ் காவல் படை, இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை போன்ற இந்தியப் படைகள் இந்த ஆண்டு அதிகபட்சமாக ஜூன் மாதத்தில் 49 பயங்கரவாதிகளை கொன்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு அதிகமாகும்.

இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரில் ஏப்ரல் மாதம் 28 பயங்கரவாதிகள், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் தலா 21 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் வரை மொத்தம் அதிகபட்சமாக தெற்கு காஷ்மீரில் 138 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத குழுக்களுக்கு உள்ளூர் இளைஞர்களை அதிகளவில் சேர்த்துக் கொண்டுள்ள ஷோபியன் மற்றும் புல்வாமா பகுதிகளில் 98 பயங்கரவாதிகளின் (இரண்டு மாவட்டங்களில் தலா 49) கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் இராணுவத்தால் ஆதரிக்கப்படும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீனின் 72 பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படைகள் கொன்றுள்ளனர்.

இதேபோல், ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தைபாவைச் சேர்ந்த 59 பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெய்ஷ்-இ-முகமதுவின் 37 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மற்ற 32 பயங்கரவாதிகள் இஸ்லாமிய அமைப்பு (ஐ.எஸ்) உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.