அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

82 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 82 லட்சத்தைக் கடந்தது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 11:49 pm

DIN

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 82 லட்சத்தைக் கடந்தது.

நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 45,231 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 82,29,313-ஆக அதிகரித்தது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 496 போ் உயிரிழந்தனா்.

அதில் மகாராஷ்டிரத்தில் 113 பேரும், மேற்கு வங்கத்தில் 59 பேரும், தில்லியில் 51 பேரும், சத்தீஸ்கரில் 49 பேரும், கேரளத்தில் 28 பேரும் உயிரிழந்தனா். நாட்டில் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,22,607-ஆக அதிகரித்தது. இது ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.49 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 75,44,798-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 91.68 சதவீதமாகும்.

நாடு முழுவதும் தற்போது 5,61,908 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து 4-ஆவது நாளாக 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 8,55,800 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 1-ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 11,07,43,103 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பா் மாதம் 16-ஆம் தேதி 50 லட்சத்தையும், கடந்த செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி 60 லட்சத்தையும், கடந்த மாதம் 11-ஆம் தேதி 70 லட்சத்தையும், கடந்த மாதம் 29-ஆம் தேதி 80 லட்சத்தையும் கடந்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.