அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.: பட்டாசுக் கிடங்கு வெடி விபத்தில் 3 பேர் பலி; 11 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :4 நவம்பர் 2020, 7:37 am

DIN

கோரக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கப்தங்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அரியநகர் பகுதியில் வீட்டின் கீழ்தளத்தில் சட்டவிரோதமாக பட்டாசுக் கிடங்கி இயங்கி வந்துள்ளது.

இதனிடையே இன்று (புதன்கிழமை) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுக் கிடங்கிற்கு மேல்புறத்தில் உள்ள இல்லத்தில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரும் வெடித்து தீ விபத்து அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.

உடனடியாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதில் வீட்டில் தங்கியிருந்த 35 வயதுடைய நபர் உள்பட அவரது தாயார் மற்றும் 14 வயது சிறுமி உயிரிழந்தனர். மேலும் தீ விபத்தால் 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து கப்தங்கஞ்ச் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.