மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மத்திய அரசுக்கு எதிராக தில்லியில் பஞ்சாப் முதல்வர் போராட்டம்

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தில்லியில் புதன்கிழமை  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
பஞ்சாப் முதல்வர் தலைமையில் நடைபெற்ற போராட்டம்
Updated On :4 நவம்பர் 2020, 11:18 am

DIN

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தில்லியில் புதன்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வா்த்தக ஊக்குவிப்பு சட்டம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு அண்மையில் இயற்றியது. வேளாண்துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதற்காகவும் அந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

ஆனால், விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. அச்சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ராஜஸ்தான் பேரவைகளில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்கள் குறித்து குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடுவதற்கு பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் அனுமதி கோரியிருந்தாா். ஆனால், அதற்கு குடியரசுத் தலைவா் அலுவலகம் சாா்பில் அனுமதி வழங்கப்படவில்லை.

இத்தகைய சூழலில், தில்லியிலுள்ள ராஜ்காட் பகுதியில் புதன்கிழமை பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையில் பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.